பிரித்தானியாவில் இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! நாடு கடத்தப்படும் ஆபாயம்

Report Print Vethu Vethu in பிரித்தானியா

பிரித்தானியாவில் இருந்து இலங்கையர் ஒருவர் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளரான ஹேமகே பத்திரனகே என்பவரே இந்த நிலைக்கு முகங்கொடுத்துள்ளார்.

பிரித்தானியாவின் Worcester பகுதியில் வசிக்கும் இலங்கை பயிற்சியாளரே இவ்வாறு நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளார்.

பிரித்தானியாவில் சிறுவர்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு கிரிக்கெட் பயிற்சி வழங்கும் குறித்த இலங்கையர், போதுமான பணம் சம்பாதிக்காத காரணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

Worcester பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான ஹேமகே பத்திரனகே விசாவுக்கான தகுதியைப் பெற்றுக் கொள்ள 30,000 யூரோ சம்பாதிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

27 வயதான அவர் மனித உரிமைகள் அடிப்படையில் தங்கியிருப்பதற்கு உள்துறை அலுவலகத்தில் முறையிட்டுள்ளார்.

எனினும், அவரது மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டை விட்டு செல்ல 20 நாட்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.