பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிரான யோசனை

Report Print Steephen Steephen in பிரித்தானியா

இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை நிறுத்துமாறு கோரி, தமிழர்களுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

இலங்கை இராணுவத்தினர் செய்துள்ள குற்றச்செயல்கள் 5 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கையை ஒன்றையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

இலங்கைக்கு எதிரான இந்த யோசனைக்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தின் 16 உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர்.

சியோப்ஹான் மெக்டோனா, டொம்பேர்க், டொம் பிளக்மேன், ஜோன் ரயன்.ஜே.எஸ்.ஜிம் கனிம்ஹம் ஆகிய பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த யோசனைக்கு அனுசரணை வழங்கியுள்ளனர். இலங்கையில் 2.3 மில்லியன் ஆயுதங்கள் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.