பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்புவோருக்கு மகிழ்ச்சித் தகவல்!

Report Print Vethu Vethu in பிரித்தானியா

பிரித்தானிய பவுண்டின் பெறுமதி சில வாரங்களுக்கு பிறகு உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு வங்கித் தரவுகள் தெரிவிக்கின்றன.

நேற்றையதினம் பவுண்டின் பெறுமதி திடீரென உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு பொருளியல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறிய பின்னராக காலப்பகுதியில், பிரித்தானிய அந்நிய செலாவணி விகிதம் தளம்பல் நிலையை அடைந்துள்ளது.

சமகாலத்தில் பிரித்தானியாவில் மருந்துகளின் பற்றாக்குறை இருப்பதாகவும், இதனால் தேசிய சுகாதார சேவை பாதிக்க கூடும் எனவும், தேசிய சுகாதார சேவை வழங்குநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ப்ரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்துவது பவுண்ட் பெறுமதியை நிலையாக வைத்திருக்க உதவியாக அமையும் என துறைசார் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது யூரோவிற்கு எதிராக ஒரு ஸ்ரேலிங் பவுண்ட் 1.114 யூரோ என்ற ரீதியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிளவு, பிரித்தானியாவின் பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பிரித்தானிய அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த சில வாரங்களாக ஸ்ரேலிங் பவுண்டின் பெறுமதி குறைவடைந்திருந்தது. இதனால் அந்நாட்டிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்புவோர் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

கோடைக்கால விடுமுறையை கழிக்க வெளிநாடுகளுக்கு சென்றுள்ள பிரித்தானியர்கள் பாதிப்பை எதிர்நோக்கி இருந்தனர்.

விடுமுறைக்காக இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.