லண்டனில் தீப்பற்றி எரியும் பாடசாலை - தீயணைப்பு படையினர் குவிப்பு

Report Print Vethu Vethu in பிரித்தானியா

பிரித்தானியாவின் தலைநகரில் பாடசாலை கட்டடம் ஒன்று தீப்பிடித்து எரிந்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

லண்டன் Dagenham பகுதியில் ஆரம்ப பாடசாலை ஒன்றிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயை கட்டுப்படுத்துவதற்கு 12 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 80 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Hewett வீதிக்கு அருகிலுள்ள பாடசாலை ஒன்றில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

பிரித்தானியா நேரப்படி இன்று அதிகாலை 4.50 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த பாடசாலையின் உயரமான கட்டடம் ஒன்று அரைவாசி பகுதி தற்போது முற்றாக எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தீ விபத்திற்கான காரணம் இன்னமும் தெரியவில்லை என லண்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.