லண்டனில் காரை மோதச் செய்து பொது மக்கள் மீது தாக்குதல்! பயங்கரவாத தாக்குதலா?

Report Print Murali Murali in பிரித்தானியா

லண்டனின் வடமேற்கு பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகில் பொதுமக்கள் மீது காரொன்று மோதியதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

பிரென்ட் என்ற பகுதியில் இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் சிக்கிய மூவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காரில் காணப்பட்ட மூன்று ஆண்களும் பெண்ணொருவரும் இஸ்லாமிய சமூகத்தவர்களுக்கு எதிராக கோசங்களை எழுப்பிய பின்னர் காரால் பொதுமக்கள் மீது மோதினர் என தகவல்கள் வெளியாகின்றன.

அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் தப்பிச்சென்றுள்ளனர். எவ்வாறாயினும், இந்த சம்பவத்தை பயங்கரவாதம் என்ற கோணத்தில் விசாரணை செய்யவில்லை என அந்நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை குறிப்பிட்ட சமயத்தில் பள்ளிவாசலில் விரிவுரையொன்றை ஏற்பாடு செய்திருந்த இஸ்லாமிய அமைப்பொன்று இந்த தாக்குதல் இஸ்லாமிய வெறுப்புணர்வை மையமாக கொண்ட தாக்குதல் என தெரிவித்துள்ளது.