லண்டனில் வடக்கு ஆளுனருக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்! ஒருவர் கைது

Report Print Eelam Ranjan Eelam Ranjan in பிரித்தானியா

லண்டன் சென்றுள்ள வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரேவுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் இன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் YMCA Indian Student Hostel க்கு முன்னால் நடைபெற்றுள்ளது.

'இனப்படுகொலை சிங்கள அரசின் ஆளுநரே இலங்கைக்கு திரும்பிப் போ' என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசங்களை எழுப்பியுள்ளனர்.

இதனையடுத்து பெருமளவிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்களுடன் வந்து கட்டுப்படுத்த முனைந்துள்ளனர்.

இந்நிலையில், ஆளுநருக்கு எதிராக கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்திய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளான தமிழ் இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers