பிரித்தானிய பாராளுமன்றத்தில் இன்று எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

Report Print Dias Dias in பிரித்தானியா

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 06 மணியளவில் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொன்சர்வேற்றிவ் கட்சியின் 48பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதைத் தொடர்ந்தே இன்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

பிரெக்ஸிற் திட்டத்தில் பிரித்தானியாவுக்கு சாதகமான அம்சங்கள் இல்லை எனக் கூறி அதிதீவிர பிரெக்ஸிற் ஆதரவு சார்பானவர்களே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தெரேசா மேயை கொன்சர்வேற்றிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய தலைவரை பிரதமராக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போதை சூழல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள தெரேசா மே, தன்னை பிரதமர் பதவியிலிருந்து தன்னை நீக்கினால் அது நாட்டின் எதிர்காலத்தை பாதிக்குமெனவும் நிச்சயமற்ற நிலையை உருவாக்குமெனவும் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தின் முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரதமர் தன்னால் இயன்ற அளவுக்கு இவ்வாக்கெடுப்பை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் புதிதாக தெரிவு செய்யப்படும் பிரதமர் பிரெக்ஸிற்றை முழுமையாக ரத்து செய்யும் நிலையோ அல்லது தாமதப்படுத்தும் நிலையோ ஏற்படுமெனவும் அவர் எச்சரித்தார்.

கட்சிக்குள் ஏற்படும் இப்பிளவு தேசிய நலனை பாரிய அளவில் பாதிக்குமெனவும் பல வருடங்களாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடுமெனவும் பிரதமர் தெரிவித்தார்.