தெரேசா மேயிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி!

Report Print Murali Murali in பிரித்தானியா

பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்ட நிலையில், குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு அந்நாட்டு நேரப்படி இன்று மாலை ஆறு மணிக்கு நடைபெற்றது.

Conservative கட்சியின் 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதைத் தொடர்ந்தே இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பிரெக்ஸிற் திட்டத்தில் பிரித்தானியாவுக்கு சாதகமான அம்சங்கள் இல்லை என தெரிவித்து, அதிதீவிர பிரெக்ஸிற் ஆதரவு சார்பானவர்களே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரேசா மே 83 மேலதிக வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் தெரேசா மே ஆட்சி தப்பியது!

பிரித்தானியாவில் Brexit விவகாரம் தொடர்பில் நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை எதிர்கொண்ட பிரதமர் தெரேசா மே 200 வாக்குகளில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

இருப்பினும் 117 எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அவரது ஆட்சிக்கு எப்போது வேண்டுமானாலும் சிக்கல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

தற்போதுள்ள சூழலில் Brexit விவகாரம் தொடர்பில் மே அரசு மேற்கொள்ளும் எந்த முடிவும் சிக்கலையே ஏற்படுத்தும் எனவும் அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே 2022 தேர்தலுக்கு முன்னர் தாம் பதவியை விட்டு விலகுவேன் என தெரேசா மே குறிப்பிட்டிருந்த நிலையில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி அவருக்கு புது தெம்பை அளிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

Brexit விவகாரம் நடைபெற்றுவரும் நிலையில் தலைவரை மாற்றுவது என்பது தவறானது என குறிப்பிட்டிருந்த மே, மனதளவில் அடுத்த தேர்தலில் கட்சியை வழி நடத்தவே விரும்புகிறேன் எனவும், ஆனால் அது நிறைவேறாது என்பதை ஏற்றுக் கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த 2 ஆண்டுக்குள் தாம் பதவி விலக இருப்பதாக குறிப்பிட்டுள்ள மே, அது தேர்தலுக்கு முன்னர் நடைபெறும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் தாம் எப்போது பதவி விலகுவேன் என்பதை மே இதுவரை தெளிவாக குறிப்பிடவில்லை.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா உத்தியோகப்பூர்வமாக வெளியேறிய பின்னரே மே பதவி விலக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மே தோல்வியை சந்தித்தார் என்றால் கட்சி பொறுப்பில் இருந்தும், பின்னர் பிரதமர் பதவியில் இருந்து விலகியிருப்பார்.

இதனிடையே தெரேசா மேயின் வெற்றிக்கு ஆஸ்திரிய ஜனாதிபதி Sebastian Kurz வரவேற்றுள்ளதுடன் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.