பதவியில் நீடிப்பாரா தெரேசா மே! பிரித்தானிய நாடாளுமன்றில் வாக்கெடுப்பு ஆரம்பமானது

Report Print Murali Murali in பிரித்தானியா

பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் Brexit ஒப்பந்தம் தொடர்பான வாக்கெடுப்பு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

Brexit ஒப்பந்தம் தொடர்பான தெரேசா மேயின் யோசனைக்கு, ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் எதிராக வாக்களிக்கவிருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இந்த விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மற்றுமொரு நிவாரண ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை தெரேசா மே உடனடியாக ஆரம்பிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இன்றையதினம் நாடாளுமன்றில் இடம்பெறும் வாக்கெடுப்பில் தோல்வி ஏற்படும் பட்சத்தில், தெரேசா மே பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Latest Offers