நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மயிரிழையில் வெற்றிபெற்றார் தெரேசா மே

Report Print Murali Murali in பிரித்தானியா

பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் 19 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தெரேசா மேயிற்கு எதிராக தொழிற்கட்சி சார்பில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது.

இது குறித்து விவாதம் இடம்பெற்று வந்த நிலையில், சற்று முன்னர் வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில் பிரேரணைக்கு ஆதரவாக 306 பேரும் எதிராக 325 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.

இதன் மூலம் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை 19 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

முன்னதாக, பிரக்ஸிட் அமுல்படுத்துவது தொடர்பாக, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த வாக்கெடுப்பில் தெரசா மேயின் தரப்பு தோல்வி அடைந்தது.

பிரக்ஸிட்டை அமுல்படுத்துவது குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தெரசா மேயின் தரப்பு 230 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

இந்த வாக்கெடுப்பில் தெரசா மேயின் தரப்பு படுதோல்வி அடைந்தது. 432 பேர் பிரக்ஸிட்டுக்கு எதிராகவும் 202 பேர் பிரக்ஸிட்டுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.

இந்நிலையில், பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயிற்கு எதிராக தொழிற்கட்சி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.