தமிழர்களின் கழுத்தை வெட்டுவதாக கூறிய பிரிகேடியர் லண்டனில் கைது?

Report Print Vethu Vethu in பிரித்தானியா

பிரித்தானியாவில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ கைது செய்யப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவில் தமிழர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் போர்குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படலாம் என தெரியவந்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வினோத் பெரேரா மற்றும் பல்லியகுரு என்ற சிங்களவர்கள் இருவர் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதன்போது பிரியங்க பெர்னாண்டோ கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பிரிகேடியர் வழக்கில் ஆஜராகாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மேற்கொண்ட போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரித்தானியா சனல் 4 தொலைகாட்சி காணொளிகள் சாட்சியாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.