லண்டனில் தமிழர்களை அச்சுறுத்திய பிரிக்கேடியருக்கு பிடியாணை! சட்டவல்லுநர் வெளியிட்ட தகவல்

Report Print Vethu Vethu in பிரித்தானியா
387Shares

பிரித்தானியாவில் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவிற்கு வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

பொது ஒழுங்கு சட்டத்தை மீறியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தின் 5 மற்றும் 4A பிரிவுகளை மீறி பொது மக்களை அச்சுறுத்தியமை மற்றும் அவரது செயல் துன்புறுத்தும் வகையில் காணப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ குற்றவாளி என வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து, சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கீத் குலசேகரம் கருத்து வெளியிட்டார்.