போராட்டம் வெடிக்கும் சாத்தியம்! எலிசபத் ராணி, குடும்பத்தாரை லண்டனிலிருந்து வெளியேற்ற திட்டம்?

Report Print Murali Murali in பிரித்தானியா

ராணி இரண்டாம் எலிசபத் மற்றும் அவரது குடும்பத்தாரை லண்டனிலிருந்து வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக பிரித்தானிய நாடாளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகமானோர் வாக்களித்தனர்.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது தொடர்பான காலக்கெடு நெருங்கி வருவதால் பிரித்தானிய பிரதமர் தெரசா மே தயாரித்த செயல்திட்டத்தின் மீது பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த எதிர்ப்பு போராட்டமாக உருவெடுக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அப்படி ஒரு போராட்டம் வெடித்தால் லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் இருந்து ராணி இரண்டாம் எலிசபத் மற்றும் அவரது குடும்பத்தாரை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டுசெல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முந்தைய பனிப்போர் காலத்திலும், பிரித்தானியா மீது சோவியத் யூனியன் (ரஷியா) அணு ஆயுத தாக்குதல் நடத்தலாம் என அஞ்சப்பட்ட வேளையிலும் பிரிட்டன் அரசக் குடும்பத்தினர் இதுபோல் அரண்மனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இவர்கள் லண்டன் நகருக்கு வெளியே பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்ட வரலாறையும் அந்த செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers