பிரெக்ஸிட் விவகாரத்தில் திடீர் திருப்பம்!

Report Print Murali Murali in பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை தாமதப்படுத்துவதற்கு பிரித்தானிய மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது குறித்து 2016ஆம் ஆண்டு முடிவெடுத்த போது அதற்கு ஆதரவாக அந்நாட்டு மக்கள் வாக்களித்திருந்தனர்.

இதனையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா முறைப்படி வெளியேறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

எனினும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை பிரித்தானிய நாடாளுமன்றம் நிராகரித்தது. இந்த விடயம் குறித்து பிரித்தானிய பாராளுமன்றத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி ஒரு தீர்மானம் வரவுள்ளது.

இந்நிலையில், பிரெக்சிற் தொடர்பில் மக்கள் விருப்பம் எப்படி இருக்கிறது என்பதை அறிய மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பிலேயே இவ்வாறு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 53 சதவீதமானோர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை பிரித்தானியா தாமதப்படுத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், 49 சதவீதமானோர் ஒப்பந்தமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறினால் அது பேரழிவை ஏற்படுத்தி விடும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இரண்டாது பொது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் அல்லது தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Latest Offers