புகலிட கோரிக்கை நிராகரிப்பு! ஈழத்தமிழருக்கு சாதகமாக தீர்ப்பளித்த பிரித்தானிய உச்ச நீதிமன்றம்

Report Print Murali Murali in பிரித்தானியா

புகலிடம் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஈழத்தமிழர் ஒருவரின் மேன்முறையீட்டு மனு மீதான வழக்கில் பிரித்தானிய உச்ச நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு ஒன்றை இன்று வழங்கியுள்ளது.

இலங்கை படையினரால் மேற்கொள்ளப்பட்ட துன்புறுத்தல்களால் ஏற்பட்ட காயங்கள் பெயர் குறிப்பிடப்படாத மேற்படி ஈழத்தமிழரின் உடலில் காணப்பட்டிருந்தன.

எனினும், சித்திரவதையால் ஏற்பட்ட இந்த காயங்கள் மேற்படி நபரால் சுயமாக மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டை பிரித்தானியாவின் கீழ் நீதிமன்ற நீதிபதிகள் முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த நபரின் புகலிட கோரிக்கை வழக்கு நிராகரிக்கபட்டிருந்தது. இதனையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

மேன்முறையீட்டு மனுமீதாக வழக்கில் பிரித்தானிய உச்ச நீதிமன்றம் ஈழத்தமிழருக்கு சாதகமான தீர்ப்பு ஒன்றை இன்று வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தீர்ப்பு தொடர்பில் சட்டத்தரணி கணநாதன் கருத்து தெரிவிக்கையில்,

“இந்தத் தீர்ப்பானது இவ்வாறான முறையில் புகலிட கோரிக்கை நிராகரிக்கபட்ட ஏனைய ஈழத்தமிழர்களின் மேன்முறையீட்டு மனுக்கள் தொடர்பான வழக்குகளுக்கும் ஒரு முன்மாதிரியான தீர்ப்பாகும்” என கூறியுள்ளார்.

Latest Offers