பிரித்தானியர்களின் எண்ணங்களை புரட்டிப்போட்ட இலங்கை பெண்! உணவில் ஈர்ப்பு கொண்ட மக்கள்

Report Print Vethu Vethu in பிரித்தானியா

இலங்கையின் பெயரை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்ற இலங்கை தாய் மற்றும் மகள் தொடர்பில் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

லண்டனில் வசிக்கும் தாயும் மகளும் பிரித்தானிய மக்களிடம் இலங்கை உணவை பிரபலப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஷாக்யா மானகே என்பவரும் அவரது மகளான துல்ஸி மானகே என்பவருமே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பிரித்தானியா செல்வதற்கு முன்னர் இந்த தாயும் அவரது கணவரும் மகளும் நுகேகொடை பிரதேசத்தில் வசித்து வந்துள்ளனர்.

எனக்கு இரண்டு வயதாக இருந்த போது சட்டத்தரணியாக இருந்த எனது தந்தையும், ஆசிரியராக இருந்த தாயும் பிரித்தானியாவுக்கு சென்றிருந்தனர் என துல்ஸி மானகே தெரிவித்துள்ளனர்.

லண்டன் பல்கலைக்கழகத்தில் நான் பட்டதாரியாகும். லண்டன் சென்ற பிறகு எனது தந்தையும் தாயும் விதவிதமாக இலங்கை உணவுகளை தயார் செய்தனர். புத்தாண்டின் போது அனைத்து பலகார வகைகளையும் செய்வதனை எனது பெற்றோர் பழக்கமாக கொண்டிருந்தனர்.

இதன்போது எனது தாயும் பிரித்தானியர்களுக்கு இலங்கை உணவு தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்பினார்கள். பிரித்தானியா மக்கள் மத்தியில் இலங்கை உணவு தொடர்பில் பிழையான எண்ணம் இருந்தமையே அதற்கு காரணமாகும்.

இலங்கை உணவு உடலுக்கு ஆரோக்கியமற்றதென பிரித்தானியர்களுக்குள் ஒரு எண்ணம் இருந்தது. இதனால் நான் இலங்கை உணவு தொடர்பில் எழுத ஆரம்பித்தேன். இலங்கை உணவு எவ்வளவு சுவை மற்றும் ஆரோக்கியமானதென தெரியப்படுத்த விரும்பினேன். அதனுடன் நிறுத்தாமல் பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டு இலங்கை உணவின் சுவையை வெளிப்படுத்தினேன்.

லோன்லி ப்லெனட் சஞ்சிகையினால் 2019ஆம் ஆண்டின் சுற்றுலா பயணிகளுக்கான சிறந்த இடமாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. இலங்கையின் யுத்தத்திற்கு பின்னர் பிரித்தானியா மக்களுக்கு இலங்கை மீது அவதானம் செலுத்துப்பட்டுள்ளது.

பிரித்தானியா மக்களுக்கு இலங்கை உணவு மீது ஏற்பட்டுள்ள ஈர்ப்பும் இதற்கு ஒரு காரணமாகும். மேலும் இவ்வாறான உணவு தயாரித்து பிரித்தானியா மக்களிடம் பிரபலப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers