பிரெக்ஸிட் உடன்படிக்கை! மீண்டும் தெரேசா மேயிற்கு மாபெரும் தோல்வி

Report Print Murali Murali in பிரித்தானியா

பிரெக்ஸிட் உடன்படிக்கை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்ற இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரேசா மே தோல்வியடைந்துள்ளார்.

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரெக்ஸிட் தொடர்பான திரேசாமேயின் நிலைப்பாட்டுக்கு எதிராக 391 வாக்குகள் பதிவாகியுள்ளன.

பிரெக்ஸிட் உடனபடிக்கை குறித்து பிரிதமர் தெரேசா மே பெரும் சிக்கல்களை சந்தித்து வந்தார். இதனையடுத்து, இறுதியாக ஸ்ட்ராபேர்க்கில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் அவர் சந்திப்பை நடத்தி இருந்தார்.

இதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுடனான பிரெக்ஸிட் உடன்படிக்கை இன்று அந்நாட்டு நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்டது.

எனினும் இரண்டாவது வாக்கெடுப்பிலும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த உடன்படிக்கையை ஏற்கமறுத்துள்ளதுடன், குறித்த உடன்படிக்கைக்கு எதிராக 391 பேர் வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும் புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தையும் அந்த நாட்டின் எதிர்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோபன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தெரேசா மே ஒப்புக் கொண்ட விடயங்கள் எவையும் அதில் உள்ளடக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் தெரேசா மேயின் கென்சவேட்டி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இணைந்து இதன் போது எதிராக வாக்களித்திருந்தனர்.

இதேவேளை, இந்த விடயம் குறித்து கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற முதலாவது வாக்கெடுப்பிலும் பிரதமர் தெரேசா மே வரலாற்று தோல்வியை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers