பிரித்தானியாவில் இலங்கை தமிழர் படுகொலை - சந்தேக நபர் அதிரடியாக கைது - காணொளியை வெளியிட்ட பொலிஸார்

Report Print Vethu Vethu in பிரித்தானியா

பிரித்தானியாவில் இலங்கைத் தமிழர் ஒருவரை கொலை செய்த பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தின் போது, இலங்கை தமிழரை கொலை செய்த சந்தேக நபர் கைது யெ்யப்பட்டுள்ளார்.

54 வயதான இலங்கையர் கடந்த திங்கட்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.

லண்டன் Pinner பகுதியிலுள்ள ரவியின் கடையில் வைத்து அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

கத்தியால் குத்திய சந்தேக நபர் கடையில் சில பவுண்டுகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

படுகொலை செய்யப் பட்டவரின் நெஞ்சு பகுதியில் குத்தப்பட்டமையினால் அவர் உயிரிழந்ததாக பிரித்தானியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் 44 வயதான நபர் ஒருவர் ஹரோ பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டதாக ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரவி கதிர்காமர் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் குறித்த பகுதியில் நடமாடியமைக்கான காணொளியையும் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் வௌியிட்டுள்ளனர்.