பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்!

Report Print Murali Murali in பிரித்தானியா
1609Shares

பிரித்தானியா சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களிடமும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா சென்ற நான்கு இலங்கையர்கள் லண்டன் Luton விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த புதன் கிழமை கைது செய்யப்பட்டனர். பிரித்தானியாவினால் தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நால்வரும், பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடுத்து நிறுத்தப்பட்டது, பொலிஸ் மற்றும் குற்றவியல் சான்று சட்டம் 1984 கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தற்போதுவரை தகவலறிய முடியவில்லை.

குறித்த இலங்கையர்கள் புகழிடக்கோரிக்கையாளர்களா? அல்லது ஐரோப்பாவில் உள்ள ஏனைய நாடுகளில் புகழிடக் கோரிக்கையாளர்களாக வாழ்ந்து பிரித்தானியாவுக்கு செல்ல முற்பட்டவர்களா? என்பது குறித்த தகவல்கள் தெளிவாகவில்லை.

இதேவேளை, பிரித்தானியா தொடர்ச்சியாக பயங்காரவாத அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருகின்றது. இதனால் அங்கு கடுமையாக சட்டங்கள் விதிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், குறித்த இலங்கையர்கள் நால்வரிடமும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.