லண்டனில் கைது செய்யப்பட்ட இலங்கையர்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பா?

Report Print Murali Murali in பிரித்தானியா

கடந்த வாரம் லண்டன் Luton விமான நிலையத்தில் வைத்து கைது நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டப்பட்டுள்ளது.

கடந்த புதன் கிழமை அவர்கள் கைது செய்யப்பட்டனர். பிரித்தானியாவினால் தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரும், பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடுத்து நிறுத்தப்பட்டது, பொலிஸ் மற்றும் குற்றவியல் சான்று சட்டம் 1984 கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

பிரித்தானியாவில் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, கைது செய்யப்பட்டுள்ள நால்வருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பிருக்கலாம் என யாட் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கைதுசெய்யப்பட்டவர்களின் குறித்த உத்தியோகப்பூர்வமான அறிவிப்புகள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.