லண்டனில் கைதான இலங்கையர்கள் யார்? நேரடியாக களத்தில் குதித்தது இலங்கை அரசு

Report Print Vethu Vethu in பிரித்தானியா
4377Shares

பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் எந்தவித தகவல்களும் அறிவிக்கப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் லண்டன் லூட்டன் விமான நிலையத்தில் நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த நான்கு பேரும் இலங்கையர்கள் என்று கூறப்பட்ட போதிலும் அவர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் மெட்ரோபோலிடன் பொலிஸாரினால் அந்த நாட்டு தூதரகத்திடம் வழங்கப்படவில்லை என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் பேட்பெஷர் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பிரித்தானியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.