பிரித்தானியாவில் பரிதாபமாக உயிரிழந்த தமிழர்! தாயார் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை

Report Print Murali Murali in பிரித்தானியா

பிரித்தானியாவில் வீதி வன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களும் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீதிவன்முறை காரணமாக கோபிநாத் காசிவிஸ்வநாதன் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், அவரின் தாயார் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவில் அரச பதவியில் இருந்த காசி விஸ்வநாதன், கடந்த செவ்வாய்கிழமை கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வெம்ளே பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலின் போது அங்கிருந்து தப்பிச் சென்ற போதே அவரை கார் மோதியுள்ளது.

இந்நிலையிலேயே, தனது மகனின் உயிரை பறித்த வீதி வன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களும் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என கோபிநாத் காசிவிஸ்வநாதனின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், தனது மகனின் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் எட்டு பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers