லண்டனில் ரமழான் தொழுகையின்போது பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு

Report Print Murali Murali in பிரித்தானியா

லண்டனில் உள்ள 7 கிங்ஸ் பள்ளிவாசலில், ரமழான் தொழுகையின் போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பள்ளிவாசலுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதன் போது தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் துப்பாக்கிதாரியை பிடிக்க முயன்றுள்ளனர்.

எனினும், அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக சர்வதேச ஊடங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த தாக்குதல் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.