பிரித்தானியாவில் உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வு

Report Print Dias Dias in பிரித்தானியா

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் நான்காவது தடவையாக உணர்வு பூர்வமாக இனவழிப்பு நினைவு நாள் ஆரம்பமாகியது.

குறித்த நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது பிரித்தானியாவின் தேசிய கொடியினை இளையோர் சார்பாக கௌதமி நிரூபன் ஏற்றினார்.

தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை போராளிகள் சார்பாக திரு ஏற்றினார்.

இவ்வேளை வீரகாவியமான மாவீர்களையும், போரின் போது கொல்லப்பட்ட மக்களையும், இனவழிப்பின் அடையாளமாக முள்ளிவாய்க்காலில் தங்களின் உயிர்களை தியாகம் செய்த உறவுகள் அனைவரையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

தங்கள் உறவுகளை நெஞ்சிருத்தி ஈகை சுடர்களை ஏற்றி அக வணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.