பிரித்தானியாவில் விமான நிலையத்திற்குள் கத்தியுடன் நுழைந்த நபரால் பெரும் பரபரப்பு!

Report Print Murali Murali in பிரித்தானியா

அனைவரையும் கொல்லப்போவதாக தெரிவித்து பிரித்தானியாவில் கத்தியுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்த நபரினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் Gatwick விமான நிலையத்தில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. 30 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து விமான நிலையத்தில் இருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டதுடன், பொலிஸார் குறித்த நபரையும் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ன.

இதேவேளை, பேருந்து பயணி ஒருவர், விமான நிலையம் நோக்கி சென்ற ஒரு மனிதரை சந்தித்ததாகவும், அவர், விமான நிலையத்தில் ஒரு படுகொலையை நிகழ்த்தப்போகிறேன், எல்லோரையும் கொல்லப்போகிறேன் என்று கூறியதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers