இலங்கையில் கொல்லப்பட்ட சகோதரி, சகோதரன் - பிரித்தானிய சகோதரனின் நெகிழ்ச்சியான செயல்

Report Print Vethu Vethu in பிரித்தானியா

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த தனது சகோதரர் மற்றும் சகோதரியின் பெயரில் தர்ம ஸ்தாபனம் ஒன்றை உருவாக்கியுள்ளதாக பிரித்தானியாவில் வாழும் சகோதரர் தெரிவித்துள்ளார்.

தனது சகோதரங்கள் குண்டுத் தாக்குதலில் சிக்கி சிகிச்சை பெற்ற வைத்தியசாலைக்கு உதவி செய்யும் நோக்கில் அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டேவிட் லின்சே என்ற பிரித்தானிய இளைஞன் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த தனது சகோதரர்கள் தங்கியிருந்த கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலுக்கு சென்று பார்வையிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளனர். அங்கு சென்று அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினால் தான் தனக்கு அமைதி கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் இலங்கைக்கு செல்வதற்கு பெற்றோர் முதலில் மறுப்பு தெரிவித்தனர். எனினும் அனுமதி கொடுத்துள்ளனர் என டேவிட் லின்சே தெரிித்தார்.

தனது தந்தையும் சகோதரர்களும் இலங்கை சென்றதாகவும் எனினும் பல்கலைகழக பரீட்சை காரணமாக தான் இலங்கை செல்லவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குண்டுத்தாக்குதலில் சகோதரன் டானியல் லின்சேயையும் சகோதரி அமெலியையும் உயிரிழந்தனர். அந்த நேரத்தில் அப்பா தொலைவில் இருந்தமையினால் உயிர் தப்பினார்.

அவர்கள் கொல்லப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும் என நினைக்கின்றேன், அப்படி செய்யாவிட்டால் எனது மனோநிலையில் அது பாதிப்பை ஏற்படுத்தும். எனது மன அழுத்தத்தை குறைப்பதற்காக நான் இலங்கை செல்லப்போகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சகோதரங்கள் கொல்லப்பட்ட அடுத்த சில நாட்களில் அவர்களின் பெயரால் தான் அறக்கட்டளை ஒன்று ஏற்படுத்தியுள்ளேன். இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனது சகோதரங்களிற்கு மருத்துவ சிகிச்சை அளித்த வைத்தியசாலைக்கு உதவுவதே நோக்கமாகும்.

குறிப்பிட்ட வைத்தியசாலை குண்டுவெடிப்பின் பின்னர் சிகிச்சை அளிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டது. அந்த வைத்தியசாலையின் தேவை குறித்து மதிப்பிடுவதற்கு ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து நிபுணர்கள் குழுவை அமர்த்தியுள்ளதாக டேவிட் லின்சே குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியசாலையில் ஒரே குழப்பநிலை காணப்பட்டதாக எனது அப்பா தெரிவித்தார். அங்கு குண்டுவெடிப்பிற்கு சிகிச்சை அளிப்பதற்கான திறன் இருக்கவில்லை எனவும் லின்சே தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களை சந்திக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் நிச்சயமாக துயரத்தில் சிக்குண்டுள்ளனர். நான் அவர்களிற்கு வாழ்வதற்கான இடமும் கல்வியும் உளவியல் ஆற்றுகையும் கிடைப்பதை உறுதி செய்யப் போகின்றேன் என பிரித்தானியாவில் வாழும் உயிரிழந்தவர்களின் சகோதரான டேவிட் லின்சே தெரிவித்துள்ளார்.