லண்டனில் இலங்கையை சேர்ந்த இளம் பெண் மரணம் - கொலை செய்யப்பட்டாரா?

Report Print Vethu Vethu in பிரித்தானியா

பிரித்தானியாவில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கையை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இரு தினங்களுக்கு முன்னர் லண்டன் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு பெண் ஒருவர் உயிரிழந்ததை அவதானித்த அயலவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த பெண் இலங்கையை சேர்ந்தவர் எனவும் அவருக்கு 30 வயது இருக்கும் என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் பல வருடங்களுக்கு முன்னர் தனது கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.

“அந்த பெண் இலங்கையை சேர்ந்தவராகும். ஆங்கிலம் அவரது முதல் மொழி அல்ல. அவர் தனியாகவே வாழ்ந்தார். அவர் லண்டனுக்கு கணவனுடனேயே வந்தார். எனினும் கணவனை பிரிந்து தனியாகவே வாழ்ந்தார்.

அவருக்கு ஒரு மகள் உள்ளார். அவரிடம் நான் சில வார்த்தைகள் மாத்திரமே பேசியுள்ளேன். தீச் சம்பவம் இடம்பெற்ற தினத்தனற்று அவர் வீட்டில் இல்லை என்றே நினைக்கின்றேன்.

இந்த தீ விபத்து இடம்பெற்றவுடன் நான் சிறு பிள்ளையை எண்ணியே யோசித்தேன்.” என அயலவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இது கொலை முயற்சியா அல்லது தற்செயலாக ஏற்பட்ட தீ விபத்து சம்பவமா என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.