அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் நாளில் பிரித்தானியாவில் முன்னெடுக்கப்படும் உணர்வுபூர்வமான கவன ஈர்ப்பு போராட்டம்

Report Print Dias Dias in பிரித்தானியா

அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளில் பல நாடுகளிலும், தாயகத்திலும் இப்போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இனியாவது எம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான தீர்வை இலங்கை அரசு தெரிவிக்குமா? தடுத்து வைத்திருக்கும் உறவுகளை விடுவிக்குமா? அன்றி சர்வதேசம் இதில் தலையிட்டு மக்களின் கண்ணீரை துடைக்குமா? போன்ற பல கோசங்களை எழுப்பியவாறு கண்ணீருடன் போராட்டத்தில் தமிழ் உறவுகள் ஈடுபட்டுள்ளனர்.வெள்ளை வான்களிலும், சுற்றிவளைப்புக்களிலும், காவலரண்களிலும், விசாரணைக் கைதுகளிலும் என பலரும் காணாமலாக்கப்பட்டுள்ளனர் என்பது மட்டுமல்லாது, போரின் இறுதி நாட்களில் படையினரிடம் தங்களை ஒப்படைத்தவர்கள், உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள் என தமிழர்கள் யாவருமே காணாமலாக்கப்பட்டவர்களாக உள்ளனர்.

இதற்கான நீதியைத் வேண்டியே காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒயாது போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.