லண்டனில் கத்திக் குத்து தாக்குதல் - இலங்கை இளைஞன் கொலை

Report Print Vethu Vethu in பிரித்தானியா

பிரித்தானியாவில் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் இலங்கையை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் லண்டன் நகரில் கில்ட்கன் சுரங்க ரயில் நிலையத்தில் வைத்து இரு இளைஞர்களால் ஒருவர் மீது கத்தித் குத்து தாக்குல் மேற்கொள்ளப்பட்டது.

ரயில் நிலையத்தில் இரண்டு நபர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலின் போது திடீரென வந்த நபர் இலங்கையரை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் தல்ஷான் டனியல் என்ற இலங்கை இளைஞன் உயிரிழந்துள்ளதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கால்பந்து போட்டி ஒன்றை பார்ப்பதற்காக ரயிலில் பயணிப்பதற்கு வந்த போதே அவர் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

மகனின் உயிரிழப்பு காரணமாக அவரது பெற்றோர் மனமுடைந்த நிலையில் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவளிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள், துணை மருத்துவர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் இளைஞனை காப்பாற்ற முயன்றனர், ஆனாலும் முடியாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் கத்தி ஒன்று மீட்கப்பட்டதாகவும், இந்த கொலை தொடர்பில் தகவல் அறிந்தால் தங்களை தொடர்புக் கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

You My Like This Video