இலங்கையின் நல்லிணக்கத்தை பாராட்டியுள்ள பிரித்தானியா

Report Print Ajith Ajith in பிரித்தானியா

இலங்கை நல்லிணக்க நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவதற்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் பொதுநலவாயம், ஐக்கிய நாடுகள் மற்றும் தென்னாசியாவுக்கான ராஜாங்க அமைச்சர் தாரீக் அஹ்மட் பிரபு இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

குறுகிய கால விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த இவர் நேற்று ஜனாதிபதியை சந்தித்து உரையாடியுள்ளார்.

இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் விசாரணைகளுக்கென்று பிரித்தானியா மேற்கொண்ட ஒத்துழைப்புக்களுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.