இலங்கையின் நல்லிணக்கத்துக்காக பிரித்தானியா நிதியுதவி

Report Print Ajith Ajith in பிரித்தானியா

இலங்கையின் நல்லிணக்கத்துக்காக பிரித்தானியா 10 மில்லியன் பவுண்ஸ்களை வழங்கியுள்ளது.

இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்பல், கலந்துரையாடல் மற்றும் மீள்குடியேற்ற திட்டங்களுக்காக பிரித்தானியா 10 மில்லியன் பவுண்ஸ்களை வழங்க முன்வந்துள்ளது.

அந்த நாட்டின் பொதுநலவாயத்துறை ராஜாங்க அமைச்சர் டாரிக் அஹமட் கடந்த இரண்டு நாட்களாக இலங்கையில் மேற்கொண்ட விஜயத்தின் போது இந்த உதவிக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பல பிரச்சினைகளை தீர்த்து எதிர்காலத்தை வளப்படுத்த இந்த நிதியுதவி உதவும் என்று அஹமட் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் விஜயத்தின் போது அஹமட், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட்ட பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.