லண்டனில் காணாமல் போன இலங்கை தமிழ் இளைஞன்!

Report Print Vethu Vethu in பிரித்தானியா

பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

லண்டனில் வெளியியில் சென்ற இலங்கை தமிழ் இளைஞனே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

27 வயதான சிவராம் யோகேஸ்வரன் என்ற இலங்கை இளைஞன் இறுதியாக கடந்த மாதம் 5ஆம் திகதி Kensingtonனின் Brompton வீதியோரத்தில் காணப்பட்டுள்ளார்.

Kensingtonனில் இருந்து காணாமல் போனவர் பெரிய உடல், இருண்ட கண்கள், கறுப்பு கண்ணாடி மற்றும் கறுப்பு நிற முடி கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் ஆட்டிஸம் நோயினால் பாதிக்கப்பட்டவர் எனவும் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

காணாமல் போன நபரை தீவிரமாக தேடி வரும் பொலிஸார், அவரை கண்டுபிடிக்க பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

Police appeal after 'extremely vulnerable' Kensington man goes missing during day out in London

Latest Offers

loading...