லண்டனில் பெண் உட்பட நான்கு இலங்கையர்கள் கைது

Report Print Vethu Vethu in பிரித்தானியா
4177Shares

லண்டனில் இலங்கையர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை பயங்கரவாத தடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் லண்டன் லூட்டன் விமான நிலையத்திற்கு சென்ற போதே இந்த இலங்கை பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.

இந்த குழு பயங்கரவாத சட்டம் 2000 இன் கீழ் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், பொலிஸ் மற்றும் குற்றவியல் சான்றுகள் சட்டம் 1984 இன் கீழ் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 39 வயது, 35 வயது மற்றும் 41 வயதுடைய சந்தேக நபர்கள் தெற்கு லண்டன் பொலிஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஒரு பெண், பிணையில் விடுக்கப்பட்ட போதிலும் அவரிடமும் காவலில் உள்ளவர்களிடமும் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.