பிரித்தானியாவில் வணிகவளாகம் ஒன்றில் தீவிரவாத தாக்குதல் முயற்சி? நால்வர் காயம்

Report Print Murali Murali in பிரித்தானியா

பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரின் ஆர்ன்டேல் வணிகவளாகத்தில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவித்து அந்நாட்டு பொலிஸார் நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் வணிகவளாகத்தில் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்ட நிலையில், நால்வர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரையும், குறித்த நபர் கத்தியால் குத்த முற்பட்டுள்ளார்.

அத்துடன், பொலிஸாரை துரத்தி துரத்தி தாக்குதல் நடத்துவத்துவதற்கு முயன்றதாகவும் அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த நபர் ஈவிரக்கமின்றி தாக்குதல் நடத்தியதாகவும், அது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். எவ்வாறாயினும், இந்த தாக்குதலுக்கான காரணம் வெளியாகவில்லை.

முதலில் சாதரண தாக்குதல் முயற்சி என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவரை கைதுசெய்தோம், தற்போது அவரை பயங்கரவாத தாக்குதல் முயற்சி என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்துள்ளோம் என அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.