பிரித்தானியாவின் ExCeL மண்டபத்தில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்

Report Print Dias Dias in பிரித்தானியா

பிரித்தானியாவில் வாழும் தமிழுணர்வாளர்கள் பலர் ஒன்றிணைந்து இன்று மாவீரர் நாளை நினைவுகூர்ந்தனர்.

பிரித்தானியா- எக்ஸல் மண்டபத்தில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் பெருமளவிலான தமிழ் மக்கள் கலந்து கொண்டு ஈகைச் சுடரேற்றி, மலர் தூவி உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் இளையோர் அமைப்பு செயற்பாட்டாளர்களினால் கொடி வணக்கம் நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஈகைச்சுடரிக்கான ஆயத்த மணி ஒலி எழுப்பப்பட்டு தாயக மண்ணுக்காக தம் உயிரை ஈந்த நம் மாவீரச்செல்வங்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த அஞ்சலி நிகழ்வில் பொதுச்சுடரினை புலம் பெயர் நாடுகளில் தாயகம் நோக்கிய பணிகளில் நீண்ட காலமாக பணியாற்றிக் கொண்டிருக்கும் மார்க்கண்டு ரவிசங்கர் ஏற்றி வைத்ததுடன் தமிழீழ தேசியக் கொடியினை மருத்துவப் போராளியான பிலிப் ஜோன்சன் ஏற்றி வைத்தார்.

அதனை தொடர்ந்து மாவீரர்களின் நினைவுகளோடு அவர்களுடைய திருவுருப்படங்களுக்கு செங்காந்தள் மலர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இவ் அஞ்சலி நிகழ்வில் பெருமளவிலான மாவீரர்களின் உறவினர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் தமிழுணர்வாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.