அரச குடும்பத்தின் பதவியை துறந்த ஹரியின் உருக்கமான பதிவு!

Report Print Murali Murali in பிரித்தானியா
505Shares

அரச குடும்பத்தின் பதவியை துறக்கும் இந்த முடிவை நானும் என் மனைவியும் சாதாரணமாக எடுக்கவில்லை என பிரித்தானிய இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.

பல மாத யோசனைகள், பல சவால்களுக்கு பிறகுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என ஹரி உருக்கமாக பேசியுள்ளார்.

பிரித்தானிய இளவரசராக இருந்த ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் அரச குடும்பத்தின் பதவியில் இருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்தனர். அவர்களின் இந்த முடிவுக்கு ராணி எலிசபெத்தும் ஒப்புதல் வழங்கியிருந்தார்.

இந்நிலையில், அரச குடும்பத்தின் பதவியை துறந்த பின்னர் முதன் முறையாக சென்டபெல்லில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட ஹரி இவ்வாறு கூறியுள்ளார்.

“மேகனும் நானும் திருமணமானவுடன் உற்சாகமாகவும், நம்பிக்கையுடனும் இருந்தோம். சேவை செய்வதற்காகவே இங்கு வந்தோம்.

ஆனால் நானும் என் மனைவியும் அரச பதவியை துறக்கும் இந்த முடிவை சாதாரணமாக எடுக்கவில்லை. பல மாத யோசனைகள், பல சவால்களுக்கு பிறகுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ராணி மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. கடந்த சில மாதங்களாக எனக்கும், மேகனுக்கும் அவர்கள் காட்டிய ஆதரவுக்கு, அவருக்கும் எனது குடும்பத்திற்கும் நான் நன்றி உள்ளவனாக இருப்பேன்’’ என கூறியுள்ளார்.

இதேவேளை, இளவரசர் ஹரி கனடா சென்றுள்ளதாகவும், அவர் வான்கூவரில் மனைவி மேகன் மற்றும் மகன் ஆர்ச்சியுடன் சேர்ந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.