லண்டன் ரயில் நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்றிய இருவர்?

Report Print Dias Dias in பிரித்தானியா

உடல் நலக்குறைவு காரணமாக லண்டன் ரயில் நிலையத்திலிருந்து மாஸ்க் அணிந்த இரண்டு பேர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தகவல் வெளியானதையடுத்து மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

லண்டனின் பாடிங்க்டன் ரயில் நிலையத்தில் மாஸ்க் அணிந்த ஒரு பெண் உட்கார்ந்திருக்க, அவரிடமிருந்து தூரமாக ஊழியர்கள் நிற்கும் படம் ஒன்று வெளியானது.

ரயில் நிலையத்தில் அந்த பெண் அமர்ந்திருக்கும் அந்த பகுதிக்கு யாரும் செல்லாத வகையில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டது.

ஒரு பெண்ணின் படம் மட்டும் வெளியானாலும், இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதை லண்டன் ஆம்புலன்ஸ் சேவை உறுதிசெய்துள்ளது.

இந்த செய்தி வெளியானதையடுத்து, லண்டனுக்கும் கொரோனா வைரஸ் பரவிவிட்டதா என்ற பயம் பிரித்தானியர்களை தொற்றிக்கொண்டுள்ளது.

ஆனால், அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதா என்பதைக் குறித்து கருத்து தெரிவிக்க, இங்கிலாந்தின் சுகாதாரத்துறை மறுத்துவிட்டது.