லண்டனில் பயங்கரவாத தாக்குதல் - ஒருவர் பலி - பலர் காயம்

Report Print Vethu Vethu in பிரித்தானியா

பிரித்தானியாவில் பலர் மீது கத்தியால் குத்திய நபரை லண்டன் பொலிஸார் கொலை செய்துள்ளனர்.

தெற்கு லண்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலர் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆயுதமேந்திய பொலிஸ் அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்ட நபரை சுட்டுக்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலில் பலர் காயமடைந்திருக்கலாம் என நம்பப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலர் மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்துள்ளார்.

பதற்றம் காரணமாக மக்கள் சிதறி ஓடும் போது சந்தேக நபரை நோக்கி பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். மூன்று முறை துப்பாக்கி சூடு சத்தம் கேட்டது. நான் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக நூலகம் ஒன்றிற்குள் நுழைந்து விட்டேன் என குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற பகுதி வீதிகள் மூடப்பட்ட நிலையில் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களின் நிலை மற்றும் விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers

loading...