லண்டனில் கத்தி குத்து தாக்குதல் - சிதறி ஓடிய மக்கள் - பொலிஸார் குவிப்பு

Report Print Vethu Vethu in பிரித்தானியா
3278Shares

லண்டனில் Euston பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலை அடுத்து ஆயுதமேந்திய பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த திடீர் சம்பவத்தை அடுத்து பதற்றமடைந்த மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓட ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

இந்த சம்பவத்தையடுத்து பேருந்து நிலையம் மூடப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கத்திக்குத்து காயங்களுக்குள்ளான நபர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் அவரது நிலைமை தொடர்பில் இன்னமும் தகவல் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தை அடுத்து குறித்த பகுதியை பொலிஸார் சுற்றி வளைத்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.