இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளருக்கு கொரோனா வைரஸ் தாக்கம்?

Report Print Vethu Vethu in பிரித்தானியா

பிரித்தானியாவின் சனல் – 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஜோன் ஸ்னோ கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஈரானுக்கு தேர்தலை கண்காணிக்க சென்றிருந்த அவர் மீண்டும் பணிக்கு திரும்பவில்லை. இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானில் இருந்து நாடு திரும்பிய அவரை இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். அதனை ஜோன் ஸ்னோ உறுதிப்படுத்தியுள்ளார்.

தனது உடல் நிலை சிறப்பாக இல்லை எனவும் அதனால் தான் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுவதாக ஜோன் ஸ்னோ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்களில் மிகவும் முக்கியமானவராக ஜோன் ஸ்னோ கருதப்படுகிறார்.

“இலங்கையின் கொலைக்களங்கள்” என்ற ஆவணப்படத்தில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட போர்க்குற்றங்களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார்.

இந்த ஆவணப்படும் சர்வதேச ரீதியாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.