பிரித்தானியாவில் நாளுக்கு நாள் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் - பெண் ஒருவர் உயிரிழப்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஒரே நாளில் மூவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றுவரையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் சுமார் 87 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்து தென் கொரியா, ஜப்பான், இத்தாலி மற்றும் ஈரான் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் முதன்மை மருத்துவ அதிகாரி கிறிஸ் விற்றி தெரிவித்துள்ளார்.

ஆனால் எதிர்வரும் வாரங்களில் பிரித்தானியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 என அதிகரித்துள்ளதாக முதன்மை மருத்துவ அதிகாரி Dr Catherine Calderwood தெரிவித்துள்ளார்.

நேற்று பிரித்தானியாவில் 36 பேர் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் ஸ்கொட்லாந்தில் இருவர் மற்றும் வடக்கு அயர்லாந்தில் இருவர் என தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி, மக்கள் தொகையில் 80% வரை நோய்த்தொற்று ஏற்படக்கூடும் எனவும், நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வயதானவர்கள் மற்றும் பலவீனமானவர்களிடையே இறப்பு விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக முதன்மை மருத்துவ அதிகாரி கிறிஸ் விற்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பில் இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், நோய் பரவுவதை தடுக்க பாடசாலைகளை மூடுவது, வீட்டிலிருந்து வேலை செய்வதை ஊக்குவிப்பது மற்றும் நோய் பரவுவதை தாமதப்படுத்துவதற்கு பெரிய அளவிலான கூட்டங்களைக் குறைப்பது போன்றவற்றையும் பரிசீலிப்பதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லண்டனில் கொரோனா வைரஸால் 70 வயதுடைய பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். பிரித்தானியாவில் மேலும் 30 புதிய நோயாளிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.