பிரித்தானியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரம் - தமிழ்க் கடைகளில் குவியும் மக்கள்

Report Print Tamilini in பிரித்தானியா

பிரித்தானியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் மக்கள் நாளாந்தம் பீதியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நாளாந்தம் நோய்த் தொற்றுக்கு பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிரித்து வரும் நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தயக்கம் காட்டி வருகின்றனர்.

தமக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்வதில் மக்கள் பெரிதும் அக்கறை கொள்வதுடன், பல அங்காடி நிலையங்களில் பொருட்கள் பற்றாக்குறையும் நிலவுகிறது.

பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக கடைகள் திறப்பதற்கு முன்னரே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

லண்டனில் ilford பகுதியில் அமைந்துள்ள தமிழ்க் கடை ஒன்றில் பொதுமக்கள் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காணொளியால் தமிழ் மக்கள் மேலும் கொரொனா வைரஸ் பரவும் வேகத்தால் மனப் பாதிப்படைகின்றனர் என்றே தோன்றுகின்றது.

பிரித்தானியாவில் இதுவரை 21 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், 1140 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.