கொரோனா வைரஸ் அச்சம்! லண்டனில் வெறிச்சோடி காணப்படும் பல்பொருள் அங்காடிகள்

Report Print Murali Murali in பிரித்தானியா

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், லண்டனில் உள்ள பெரும்பாலான பல்பொருள் அங்காடிகள் வெறிச்சோடி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகில் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

இந்த வைரஸ் தொற்று காரணமாக 5 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 150,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக பிரித்தானியாவில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், லண்டனில் உள்ள பெரும்பாலான பல்பொருள் அங்காடிகள் வெறிச்சோடி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்பொருள் அங்காடிகளில் கைகளை சுத்தம் செய்யும் ஜெல், Tissue Papers, வலி நிவாரண மருந்துகள் உள்ளிட்டவை விற்று தீர்ந்து வருவதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அத்தியாவசிய பொருள்களும் விரைவில் காலியாகி விடுகின்றன. இதனால் பல்பொருள் அங்காடிகள் அனைத்தும் பொருள்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.