கொரோனா வைரஸ் பரவல் வேகம் - பிரித்தானியாவில் பொருட்கள் பதுக்கல்??

Report Print Tamilini in பிரித்தானியா

புதிய கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகளை கொரோனா வைரஸ் அதிகம் தாக்கி வருகிறது.

பிரித்தானியாவிலும் நாளாந்தம் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் மக்கள் மத்தியில் பதற்ற நிலையும் அதிகரித்துள்ளது.

தம்மை பாதுகாத்துக் கொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். வீடுகளில் தங்கியிருக்க விரும்பு மக்கள் தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முண்டியடிக்கின்றனர்.

பிரித்தானியாவின் பல பகுதிகளிலுள்ள சுப்பர் மார்க்கெட்டுகள், தமிழ் கடைகளில் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு காணப்படுகின்றன. நீண்ட வரிசையில் காத்திருந்தும் பொருட்கள் கிடைக்காமல் ஏமாற்றமடைந்த மக்களும் உள்ளனர்.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழ் வர்த்தக நிறுவனங்கள் பொருட்களை பெருமளவில் பதுக்கியுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இதன் காரணமாக சாதாரண விலைகளை விடவும் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யப்பட்டுகின்றன. அதனை கொள்வனவு செய்வதில் மக்கள் அதீத ஆர்வம் காட்டுகின்றனர்.

பிரித்தானியாவில் 21 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அந்நாட்டு பிரதமரும் உங்கள் அன்பானவர்களை இழக்கப் போகின்றீர்கள் என அறிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸின் தீவிரம் காரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சமே பொருட்களின் திடீர் விலை அதிகரிப்புக்கு காரணம் என பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரித்தானியாவில் சில இடங்களில் ரெஸ்கோ சுப்பர் மார்க்கெட் பூட்டப்படும் நிலை ஏற்படும் என அங்கு பணிபுரியும் ஓர் நபர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளதோடு , கொஸ்கோ எனப்படும் மாபெரும் பொருட்கள் கொள்வனவு கடை ஒன்றில் சனக்கூட்டம் இருப்பதனையும் அவதானிக்கக்கூடியதாக காணொளி ஒன்றும் வெளிவந்துள்ளது.