பிரித்தானியா இளவரசர் சார்ள்ஸ் கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
71 வயதான இளவரசர் சார்ள்ஸூக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் எனினும் அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும் கிளரென்ஸ் மாளிகையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இளவரசர் சார்ள்ஸின் பாரியாரும் இந்த பரிசோதனையை செய்துகொண்டுள்ளதுடன் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானிய இளாவரசர் சார்ள்ஸ் தனிமைப்படுத்தப்பட்டதுடன் அவரது மனைவியான கமீலாவும் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
கொரோனா பிரித்தானியாவை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வேகமாக பரவி உயிரிழப்புக்கள் அதிகரித்துவரும் நிலையில், கடந்த சில நாட்களாக பிரித்தானிய இளவரசர் பொதுமக்களின் சமூக சேவைகளில் ஈடுபட்டிருந்தமையினாலேயே தொற்று ஏற்பட்டிருக்கலாம் என பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

