பிரித்தானிய நாடாளுமன்றம் ஒரு மாதத்திற்கு ஒத்திவைப்பு!

Report Print Steephen Steephen in பிரித்தானியா

கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக பிரித்தானிய நாடாளுமன்றத்தை ஒரு மாதம் ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை எதிர்வரும் ஏப்ரல் 21ம் திகதி மீண்டும் கூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போதைய நிலைமையில் நாடாளுமன்றம் மறு திகதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்படும் நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் ஏதேனும் பாதுகாப்பு நடைமுறைகளை கையாண்டு நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்பது பிரித்தானிய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளின் நிலைப்பாடாக இருக்கின்றது.

பிரித்தானியாவின் பல இடங்களில் இருந்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் நோய் காவிகளாக மாறக் கூடும் என பலர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானிய நாடாளுமன்ற ஏற்கனவே சிறப்பு விருந்தினர்களுக்கு மூடப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி சட்டத்திற்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆசனங்களை ஒதுக்குவது மற்றும் கடும் பாதுகாப்பு நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...