நாளாந்தம் அதிகரித்துவரும் உயிரிழப்புக்கள் - பிரித்தானியாவின் நிலை என்ன

Report Print Tamilini in பிரித்தானியா

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை நாட்களில் நடந்த உயிரிழப்புக்களை விட இன்று மிகவும் கூடுதலான மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய இன்று மட்டும் ஏற்பட்ட 563 மரணங்களுடன் சேர்த்து மொத்தமாக 2352 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரித்தானிய நேரப்படி நேற்று மாலை 5 மணிக்கு முன்னர் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கமைய இந்த தகவல் வெளியாகியுள்ளதாக பிரித்தானிய சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளில் இதுவே மிகப்பெரிய அதிகரிப்பாகும் என குறிப்பிடப்படுகின்றது.

இதுவரை பிரித்தானியாவில் இறந்தவர்கள் 13 முதல் 99 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், உயிரிழந்த 486 நோயாளிகளில் 20 பேர், 13 முதல் 93 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் எவ்விதமான சுகாதார பாதிப்புகளும் ஏற்பட்டவர்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது.

அடுத்த வாரம் அளவில் பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகள் மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் நிலைமைகள் மிகவும் மோசமடைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் பிரித்தானியாவின் துணை வைத்திய அதிகாரி Jenny Harries தெரிவித்துள்ளார்.

அதனை தவிர்ப்பதற்கு lockdown மற்றும் தூரமாக இருப்பதற்கான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு பதிவாகிய புள்ளிவிபரத்திற்கமைய 29,474 பேர் பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.