கொரோனாவுக்கு எதிராக போராட எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ள பிரித்தானிய பிரதமர்

Report Print Steephen Steephen in பிரித்தானியா

உலக தொற்று நோயாக மாறியுள்ள கொரோனா வைரஸூக்கு எதிராக போராடுவதற்காக தம்முடன் இணைந்துக் கொள்ளுமாறு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், அந்நாட்டு எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பிரித்தானிய பிரதமர் அந்நாட்டு எதிர்க்கட்சிகளுக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளதுடன் அவர்களின் கருத்துக்களை கேட்பதும் அவசியம் எனக் கூறியுள்ளார்.

அடுத்த வாரம் பிரித்தானிய அரசின் பிரதான வைத்திய அதிகாரி மற்றும் பிரதான அறிவியல் ஆலோசகர் ஆகியோர் கலந்துக் கொள்ளும் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ளுமாறு பிரதமர் ஜோன்சன், சகல எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பிரித்தானிய பிரதமர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தனக்கு லேசான சில அறிகுறிகள் தொடர்ந்தும் இருப்பதாகவும் இதனால், தான் சுய தன்மைப்படுத்தலில் இருந்து வருவதாகவும் நேற்று கூறியிருந்தார்.