பிரித்தானியாவில் சுயதொழில் புரிவோருக்கு அரசு வழங்கும் சலுகைகள்

Report Print Tamilini in பிரித்தானியா

தொடரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பலவகையான அரச சலுகைகளை வழங்கும் பிரித்தானிய அரசு, சுயதொழில் புரிவோருக்கான சலுகைகளையும் அறிவித்துள்ளது.

அந்தவகையில், நீங்கள் சுயதொழில் செய்பவராக இருந்தால், – உங்கள் கடைசி மூன்று வருட இலாபத்தின் சராசரி குறைந்தது 50000 பவுண்சுகளாக இருந்தால் அதில் 80 சதவீததை மூன்று மாதங்களுக்கு வருமானமாக பெற வாய்ப்புண்டு. மாதம் ஒன்றுக்கு 2500 பவுண்சுகள் வரை பெறலாம்.

மேலதிக விபரங்களுக்கு Click Here

சுயதொழில் செய்வோர் மேற்குறிப்பிட்ட திட்டத்தில் நீங்கள் உள்ளடக்கப்படவில்லை என்றால் Employment and Support Allowance திட்டத்திற்கோ அல்லது Universel Credit மூலமோ உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலதிக விபரங்களுக்கு Click Here

நீங்கள் சொந்தமாக வியாபாரம் செய்பவராக இருந்தால் 10000 முதல் 51000 பவுண்சுகள் வரை அரசிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

மேலதிக விபரங்களுக்கு Click Here

இந்த நெருக்கடியான சூழ்நிலையால் உங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டு இருந்தால் கடனுதவி பெற உங்கள் வங்கியினை தொடர்பு கொள்ளலாம். வழமையாக இருக்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு விரைவாக கடனை பெறுவதற்கான நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலதிக விபரங்களுக்கு Click Here

இது தொடர்பான மேலதிக விபரங்கள் ஏதும் தேவைப்படின் தமிழ் மொழியில் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

Tamil Help Line Number

Desk +442035001573

Mobile - +447525050010

Email : coronatamilhelp@gmail.com