விசேட நிபுணத்துவ மருத்துவ கற்கை நெறிகளுக்காக பிரித்தானிய சென்ற 7 இலங்கை மருத்துவர்களுக்கு கொரேனா

Report Print Kamel Kamel in பிரித்தானியா

விசேட நிபுணத்துவ மருத்துவ கற்கை நெறிகளை பூர்த்தி செய்வதற்காக பிரித்தானியாவிற்கு சென்ற ஏழு இலங்கை மருத்துவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விசேட நிபுணத்துவ மருத்துவ தகமையை பூர்த்தி செய்து கொள்வதற்காக பிரித்தானியாவிற்கு சென்றுள்ள இலங்கை மருத்துவர்களை, அவசர நிலைமையாகக் கருதி மீள அழைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடிதம் ஒன்றின் மூலம் இந்த மருத்துவ மாணவர்கள் ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பயிற்சி நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

நிபுணத்துவ மருத்துவர்களின் பயிற்சியானது நாட்டுக்கு நன்மை பயக்கும் எனவும் மனிதாபிமான அடிப்படையில் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு அவர்களை அனுப்பி வைக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிபுணத்துவ மருத்துவர்கள் தன்னார்வ அடிப்படையில் இலங்கையில் தனது சேவையை வழங்குவதற்கு விரும்புவதாக ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.